திருப்பதி கதம்ப சாதம்
பச்சைப் பயிறு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். புளியுடன் 2 தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
தேவையானவை:
பச்சரிசி- 1 கிண்ணம்
பூசணிக்காய், கத்தரிக்காய், வாழைக்காய், பறங்கிக்காய் (துண்டுகளாக அரிந்து)- தலா 3 கிண்ணம்
புளி- எலுமிச்சைஅளவு
மஞ்சள் தூள்- அரை மேசைக்கரண்டி
பச்சைப்பயிறு- கால் கிண்ணம்
கறுப்பு உளுந்து, கறுப்பு எள், மிளகு- தலா மேசைக் கரண்டி
நெய்- 4 மேசைக்கரண்டி
உப்பு- சுவைக்கேற்பு
கறிவேப்பிலை- 2 ஆர்க்குகள்
செய்முறை:
பச்சைப் பயிறு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். புளியுடன் 2 தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். மேலும், 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். காய்கறிகள், அரிசி, நெய் சேர்த்து கிளறவும். வெந்து வரும்போது, பொடி சேர்த்துக் கிளறி அடுப்பை அமைக்கவும்.