மகளிர்மணி

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணங்கள்

பல்வேறு நோய்க்கு இயற்கை மருந்து: சோற்றுக் கற்றாழை

சி.பன்னீர்செல்வம்

அனைத்து நோய்களுக்கும் சோற்றுக் கற்றாழை தீர்வு தருகிறது.

சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிட்டால் கண் பார்வை தெளிவு பெறும்.

சோற்றுக் கற்றாழையை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலும் உபயோகப்படுத்துவதாலும் பெண்கள், ஆண்களின் சிறுநீர் தாரையில் உள்ள எரிச்சல் புண்கள் குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைத் திணித்து கற்றாழையின் மடல்கள் இரு பகுதியும் நன்றாகச் சேரும் வண்ணம் நூலால் இருகக் கட்டி இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் பார்க்கும்போது, வெந்தயம் நன்கு முளைவிட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள்ளுக்குச் சாப்பிட்டு வர தீராத வயிற்றுவலி, வாய் வேக்காடு, வயிற்றுப் புண், சிறுநீர் தாரைப் புண் ஆகியவை முற்றிலும் குணமாகும்.

கற்றாழை சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்துவர உடல் சூட்டினால் ஏற்படும் முகப் பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை, மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுகள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!

தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

SCROLL FOR NEXT