முடக்கற்றான் சப்பாத்தி
நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், முடக்கற்றான் கீரை ஆகியவற்றை எண்ணெய்விட்டு பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு- அரை கிலோ
முடக்கற்றான் கீரை- 1 கைப்பிடி அளவு
தக்காளி- 1 சிறியது
கேரட்- 1 சிறியது
பச்சை மிளகாய்- 4
பெரிய வெங்காயம்- 1
சீரகம்- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- சிறிதளவு
உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
Advertisement
Advertisement
நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், முடக்கற்றான் கீரை ஆகியவற்றை எண்ணெய்விட்டு பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சீரகம், உப்பு சேர்த்து மிக்சில் போட்டு நன்றாகக் கெட்டியாக அரைத்துகொள்ளவும். அரைத்த விழுதை கோதுமை மாவில் கொட்டி சப்பாத்தி அள்லது பூரி மாவு பதத்துக்கு பிசைந்து, சுட்டால் நன்றாக இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.