தேவையான பொருள்கள்:
பச்சரிசி மாவு (சலித்தது) - ஒரு கிண்ணம்
காராமணி (சுத்தமாக்கியது) - அரை கிண்ணம்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கிண்ணம்
தாளிக்க: நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
பெருங்காயத்தூள் (விரும்பினால்) - சிறிதளவு
செய்முறை:
காராமணியை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். பிறகு, தண்ணீர் சேர்த்துக் குழைய வேக வைக்கவும். வெந்ததும் காராமணியில் உள்ள தண்ணீரை வடிக்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீர்விடாமல் அரைக்கவும். பச்சை மிளகாயைச் சிறு துண்டுகளாக்கவும்.
கறிவேப்பிலையை உருவிவைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
பின்னர், அதோடு அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
அந்த நீரில் குழைய வேகவைத்த காராமணி, வதக்கிய இஞ்சி - பச்சை மிளகாய் கலவையைச் சேர்க்கவும்.
இதில் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். மாவுக்கலவை நன்கு சுருண்டு வரும். அப்போது இறக்கி மிதமான சூடு இருக்கும்போது மாவுக் கலவையில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.