கேழ்வரகுக் கூழ் 
மகளிர்மணி

கேழ்வரகுக் கூழ்

கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியாகக் கரைத்து முதல் நாள் இரவே புளிக்கவைக்கவும்.

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள்:

கேழ்வரகு மாவு - ஒரு கிலோ

பச்சரிசி நொய் - 300 கிராம்

சின்ன வெங்காயம் - 10 (பெரியதாக நறுக்க)

தயிர் - 2 கிண்ணம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியாகக் கரைத்து முதல் நாள் இரவே புளிக்கவைக்கவும். மறுநாள் பானையை அடுப்பில் வைத்து தண்ணீர்விட்டுக் கொதிக்க வைக்கவும். பச்சரிசி நொய்யைக் கழுவி களைந்து, கொதித்த நீரில் சேர்த்து நன்கு வேகவிடவும். 

வெந்ததும், புளித்த கேழ்வரகு மாவைக் கொஞ்சம், கொஞ்சமாக அதில் சேர்த்து, மத்தின் பின்புறத்தால் அடிப்பிடிக்காமல் கிளறிக் கலந்துவிடவும்.மாவும் அரிசியும் கலந்து கெட்டியாகும். அப்போது கையில் தண்ணீர் தொட்டு, வெந்துவிட்டதா என்று பார்க்கவும். மாவு கையில் ஒட்டாமல் வந்தால் அதுவே பதம். அப்போது  இறக்கிவிடவும்.

இந்தக் கெட்டியான களியை 6 மணி நேரம் புளிக்கவைத்துப் பயன்படுத்த வேண்டும் (அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரத்திலேயே புளிக்கவிடவும்).

இதில் வேண்டிய அளவு களியை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர்விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் குளுமையான கூழ் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினகரன் வெளியேற காரணமாக இருந்தேனா? நயினாா் நாகேந்திரன் மறுப்பு

அதிமுகவினா் இணைவதில் மற்றவா்களின் குறுக்கீடு கூடாது: கி. வீரமணி

விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

அடையாளம் தெரியாத இருவா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞா் காயம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT