மகளிர்மணி

நன்னாரி சர்பத்

எல்.மோகனசுந்தரி

தேவையான பொருள்கள்:

நன்னாரி வேர்- 2 கிண்ணம்

சர்க்கரை- 1 கிண்ணம்

எலுமிச்சம் பழம்- 2

சிவப்பு ஃபுட் கலர்- 2 சிட்டிகை

செய்முறை:

நன்னாரி வேரை தண்ணீரில் கழுவி எடுத்து பாத்திரத்தில் போட்டு இரு டம்ளர் தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும். சர்க்கரையை வேறொரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு கரண்டி தண்ணீர்விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து, கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். சிவப்பு ஃபுட்கலர் சேர்த்து கலக்கவும். நன்னாரி வேர் கொதித்த தண்ணீரை வடிகட்டி இத்துடன் சேர்த்து கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். தேவையானபோது இந்த ஜூஸை கால் டம்ளர் எடுத்து, முக்கால் டம்ளர் குளிர்ந்த நீர் சேர்த்து அருந்தலாம். துருவிய இஞ்சி சிறிதளவு சேர்ப்பது கூடுதல் சுவையைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக வெளிநாடு சென்றார் போப் 14-ம் லியோ!

வயிறு உப்புசமாக இருக்கிறதா? சரிசெய்யும் வழிகள் இதோ...

இனிய மாலைவேளை... மாளவிகா மோகனன்!

ஜனவரியில் தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக்!

சபரிமலை அன்னதான உணவில் அதிரடி மாற்றம்! புதிய மெனு என்ன?

SCROLL FOR NEXT