மகளிர்மணி

பாட்டி வைத்தியம்..

முக்கிமலை நஞ்சன்

சொத்தைப் பல் வலிக்கு சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து வைத்தால் உடனே வலி குறையும்.

குழந்தைகளின் சளிக்கு வெற்றிலை, கருந்துளசி சாற்றை தேனில் கலந்து கொடுக்க வேண்டும்.

காலில் சுளுக்கு ஏற்பட்டால் சூடாக உப்பு, புளி சேர்த்து பற்று போட வேண்டும்.

பூசணிக்காய் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், நடுக்கம் போன்றவை சரியாகும்.

முடக்கற்றான் இலையை அரிசி மாவுடன் கலந்து தோசை செய்து உண்ண உடம்பு வலி தீரும்.

மஞ்சள், வேப்பிலை சமஅளவு எடுத்து அரைத்து சேற்றுப்புண் மீது பூச விரைவில் குணமாகும்.

எள் பொடி செய்து வெல்லம் கலந்து மூன்று வேளை சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

மிளகுத் தூளுடன் வெற்றிலை, சீரகம் வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.

தேள் கடிக்கு வெற்றிலையுடன் மிளகு வைத்து மென்று சாப்பிட வேண்டும். கடித்த இடத்தில் சுண்ணாம்பு வைத்தாலும் விஷம் ஏறாது.

தேவையான அளவு மிளகுப் பொடியை வெந்நீரில் கலந்து கரைத்துக் குடித்தால் அஜீரணம் முழுமையாகக் குணமாகும்.

இஞ்சி, மிளகு இரண்டையும் நசுக்கி நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி பாலுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் திடீர் காய்ச்சல் குணமாகும்.

பத்து கிராம் கடுகை பொடித்து, கால் லிட்டர் நீரில் ஊறவைத்து வடிகட்டி கொடுக்க விக்கல் உடனே குணமாகும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.

சர்க்கரை நோயாளிகள் வெள்ளரிக்காயை அதிகம் உணவில் சேர்த்துகொள்வது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT