கொய்யா மசாலா ஜூஸ்
தேவையான பொருள்கள்:
கொய்யாப்பழம் - 4
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 2 சிட்டிகை
உப்பு, சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் கட்டி - 3
செய்முறை: முதலில் கொய்யாப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய கொய்யா பழத்தின் சாற்றுடன் எலுமிச்சை சாறு, ரெட் சில்லி சாஸ், உப்பு, சர்க்கரை, ஐஸ் கட்டி சேர்த்து அரைத்து எடுக்கவும். சுவையான ஜூஸ் தயார்.
கிவி ஸ்மூத்தி
தேவையான பொருள்கள்:
கிவி பழம் - 3
சர்க்கரை - 1 கிண்ணம்
பாதாம் - 3 தேக்கரண்டி
தயிர் - அரை கிண்ணம்
பால் - 1 கிண்ணம்
ஐஸ் கட்டி - 3
செய்முறை: முதலில் கிவி பழத்தை நன்றாகக் கழுவி, அதன் தோலைச் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். பாதாமைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு, மிக்ஸியில் கிவி பழம், தயிர், பால், சர்க்கரை போட்டு அரைக்கவும். அரைத்தவுடன் ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டி, பொடியாக நறுக்கிய பாதாமைத் தூவி பரிமாறவும். சுவையான கிவி ஸ்மூத்தி ரெடி.
அத்திப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருள்கள்:
காய்ந்த அத்திப் பழம் - 5
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 கிண்ணம்
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 3 தேக்கரண்டி
காய்ச்சிய பால் - 1 கிண்ணம்
செய்முறை: முதலில் அத்திப் பழத்தை அரை கப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய பின் அதை நன்கு விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் மீதமுள்ள பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்த பின் ஆற வைக்கவும். வெண்ணிலா ஐஸ்கிரீமை இதன் மேலே வைக்கவும். சுவையான மில்க் ஷேக் தயார்.
லிச்சி பழ ஜூஸ்
தேவையான பொருள்கள்:
லிச்சி பழம் - 15
தேன் - 5 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
ஐஸ் கட்டி - 3
செய்முறை: முதலில் லிச்சி பழத்தை நன்கு கழுவி, தோலுரித்து விதைகளை நீக்கி கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸியில் லிச்சி பழம், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைக்கவும். கலவை நன்கு நைசான பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டியை சேர்க்கவும். சுவையான லிச்சி பழ ஜூஸ் தயார்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.