முகப்பு
மகளிர்மணி

குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம்

Updated On : 19 மே, 2024 at 12:54 PM
பகிர்:

தேவையான பொருள்கள்:

குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி - தலா 100 கிராம்

உளுந்து - 25 கிராம்

வெந்தயம் - அரை தேக்கரண்டி

கருப்பட்டி - 200 கிராம்

இளநீர் - அரை கிண்ணம்

செய்முறை:

முதலில் குதிரைவாலி அரிசியுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து இரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். பின்னர், இளநீரை முதல் நாளே வாங்கி வைத்து புளிக்க வைக்க வேண்டும். புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 5 மணி நேரம் புளிக்கவிடவும். கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து, கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். பின்பு ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும். சத்தான குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.