தேவையான பொருள்கள் :
புழுங்கல் அரிசி - 3 கிண்ணம்
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா கால் கிண்ணம்
உளுத்தம்பருப்பு - கால் கிண்ணம்
நறுக்கிய வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 8
நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஆனியன் அடை செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும், அதில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு, அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு அரைத்துள்ள மாவில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
பின்னர், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசைக்கல் சூடானதும், அதில் எண்ணெயை தடவி, கலக்கி வைத்துள்ள மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை ஊற்றி, ஊத்தப்பம்போல் தேய்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, நடுவில் துளை செய்து, அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் திருப்பி போட்டு, இரண்டு புறமும் பொன் முறுவலாக வந்தவுடன் எடுத்தால் சுவையான ஆனியன் அடை ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.