தேவையான பொருள்கள் :
இட்லி மாவு - 3 கிண்ணம்
இட்லி பொடி - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - 3 (நறுக்கியது)
கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை - சிறிது
எலுமிச்சை சாறு - 1 மேசைக்
கரண்டி
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி, வேக வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து கறிவேப்பிலையை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு ஊற்றி வைத்துள்ள சிறு சிறு இட்லிகளை, அத்துடன் சேர்த்து, இட்லி பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லிதழை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்போது அருமையான வறுத்த இட்லி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.