ஃபிர்ணி 
மகளிர்மணி

ஃபிர்ணி

பாலைக் காய்ச்சுங்கள். பாஸ்மதி அரிசியை ரவை போன்று உடைத்து, காயும் பாலில் சேருங்கள்.

Vishwanathan

தேவையான பொருள்கள்:

பால் - 1 லிட்டர்

பாஸ்மதி அரிசி - அரை கிண்ணம்

சர்க்கரை - 1 கிண்ணம்

இனிப்பில்லாத கோவா - கால் கிண்ணம்

தோல் நீக்கி, சீவிய பாதாம் - 1 மேசைக்கரண்டி

சீவிய பிஸ்தா - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி

குங்குமப்பூ - 1 சிட்டிகை.

செய்முறை:

பாலைக் காய்ச்சுங்கள். பாஸ்மதி அரிசியை ரவை போன்று உடைத்து, காயும் பாலில் சேருங்கள். ஒரு கிண்ணம் தண்ணீரையும் சேருங்கள். மிதமான தீயில் நன்கு வேகவிடுங்கள். அரிசி ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையைச் சேருங்கள்.

இரண்டும் சேர்ந்து நன்கு கொதிக்கும்போது, பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, கலந்து இறக்குங்கள். குளிரவைத்துப் பரிமாறுங்கள். புத்தம்புதிய பன்னீர் ரோஜா இதழ்களை மேலே தூவியும் பரிமாறலாம். கண்ணுக்கும் சேர்த்து விருந்து படைக்கும் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் ‘செயற்கை மழை’ சோதனை வெற்றி!

ஆதார் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை: ஐஆர்சிடிசி

நோ டிரண்ட்.. காவ்யா!

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்: முகமது ஷமி

ஆர்யனுக்காக... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SCROLL FOR NEXT