வாழைப்பூ குருமா 
மகளிர்மணி

வாழைப்பூ குருமா

வாழைப்பூவின் உள்ளே இருக்கும் பூக்களை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் பின்னர் குறிப்பிட்டுள்ள மசாலா பொருள்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஆர். பிரபா

தேவையான பொருள்கள்:

வாழைப்பூ - 1 (தனியாக எடுத்து நறுக்கியது)

பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

அரைக்க..:

சோம்பு - அரை தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - அரை கிண்ணம்

இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

பட்டை - 1 கிராம்பு-2

செய்முறை:

வாழைப்பூவின் உள்ளே இருக்கும் பூக்களை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் பின்னர் குறிப்பிட்டுள்ள மசாலா பொருள்களை அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும். அதன்பின்னர், வாழைப்பூ, பச்சை மிளகாய் , வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவை மிக்க குருமா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT