பருப்புப் பூரி
கோதுமை மாவுடன் கொஞ்சம் உப்பைச் சேர்த்து நீர்விட்டு பூரி தேய்க்கும் பக்குவத்தில் பிசைந்து மூடி வைக்க வேண்டும்.
Updated On : 5 ஏப்ரல், 2025 at 10:37 PM
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு- 200 கிராம்
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு- தலா 50 கிராம்
Advertisement
பச்சை மிளகாய்-4
பெருங்காயம்- அரை மேசைக் கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
Updated On : 5 ஏப்ரல், 2025 at 10:37 PM
செய்முறை:
கோதுமை மாவுடன் கொஞ்சம் உப்பைச் சேர்த்து நீர்விட்டு பூரி தேய்க்கும் பக்குவத்தில் பிசைந்து மூடி வைக்க வேண்டும்.
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் கலந்து சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்து எண்ணெய் போல் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
பச்சை மிளகாய், பெருங்காயத்தைப் பருப்பில் சேர்த்து அரைத்து பின்பு மாவுடன் உப்பு சேர்த்து பிசைய வேண்டும். பூரிக்கட்டையில் வைத்து மாவைத் தேய்த்து பூரியாகப் போட வேண்டும்.