மாங்காய் துவையல்
வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயைவிட்டு, கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும்.
தேவையான பொருள்கள்:
கெட்டியான மாங்காய் - 2
கடலைப்பருப்பு- அரை கிண்ணம்
Advertisement
Advertisement
பச்சை மிளகாய் - 3
இஞ்சி துருவல் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு
தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய்.
செய்முறை:
வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயைவிட்டு, கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும். மாங்காயை சிறு துண்டுகளாக்கி, அதையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். மூன்றையும் உப்பு சேர்த்து அரைத்து, நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கலக்கினால், கலக்கலான மாங்காய் துவையல் தயார். டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். புளி சேர்க்கத் தேவையில்லை.
நாகஜோதி கிருஷ்ணன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.