கரும்புப் பாயசம்
அகலமான ஒரு பாத்திரத்தில் கரும்புச் சாறை ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும்.
Updated On : 26 ஏப்ரல், 2025 at 10:02 PM
தேவையான பொருள்கள்:
கரும்புச் சாறு- 2 கிண்ணம்
அரிசி- 400 கிராம்
Advertisement
பாதாம் பருப்பு, திராட்சை- தலா 6
முந்திரி, ஏலக்காய்- தலா 5
வெள்ளரி விதை- 1 மேசைக் கரண்டி
Updated On : 26 ஏப்ரல், 2025 at 10:02 PM
செய்முறை:
அகலமான ஒரு பாத்திரத்தில் கரும்புச் சாறை ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும். அரிசியைக் கழுவி கரும்புச் சாற்றில் சேர்த்து வேகவிட வேண்டும். அடிப்பிடிக்காமல் அவ்வப்போது கிளறிவிட வேண்டும். அரிசி வெந்து நன்றாகக் குழைந்து கலவை ஓரளவு கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு, வெள்ளரி விதை, பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை பாயசத்தில் கலந்துகொள்ள வேண்டும்.