மகளிர்மணி

பிஸ்கட் அல்வா

பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும். தேவையான பொருள்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

தினமணி செய்திச் சேவை

நாகஜோதி கிருஷ்ணன்

தேவையான பொருள்கள்:

பிஸ்கட் - 4 பெரிய பாக்கெட்டுகள்

கோதுமை மாவு - 3 மேசைக்கரண்டி

நெய் - அரை கிண்ணம்

பால் - 3/4 லிட்டர்

சர்க்கரை, பாதாம் - தேவையான அளவு

முந்திரிப் பருப்பு-10

செய்முறை:

பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும். தேவையான பொருள்களைத் தயாராக எடுத்து வைக்கவும். நான்ஸ்டிக் வாணலியில் கால் கிண்ணம் நெய் ஊற்றி கோதுமை மாவை நெய்யில் சேர்த்து மாவு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். கோதுமை மாவு பொன்னிறமானதும் பொடித்த பிஸ்கட் சேர்த்து கிளறவும்.

மாவும், பிஸ்கட் பொடியும் நன்கு கலந்ததும் சிறிது சிறிதாக பால் சேர்த்துக் கிளறவும். கோதுமை மாவு, பிஸ்கட் கலவை பாலுடன் நன்கு கலந்ததும் அரை கப் சீனி சேர்த்துக் கிளறவும். நடு நடுவே ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறவும். நெய் முழுவதும் அல்வாவில் சேர்த்து முந்திரிப் பருப்பு சேர்க்கவும். அல்வா வாணலியில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். வேறு பாத்திரத்தில் அல்வாவை மாற்றி பாதாம் துண்டுகள் தூவிப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT