மகளிர்மணி

மேங்கோ மலாய் கேக்

மாம்பழங்களைச் சுத்தம் செய்து தோல் நீக்கிக் கொள்ள வேண்டும்.

இணையதளச் செய்திப் பிரிவு

தேவையான பொருள்கள்:

கேக் செய்ய..:

பால்- 2 கிண்ணம்

மாம்பழம்- 3 தோல் நறுக்கியது

சர்க்கரை- 4 தேக்கரண்டி

கார்ன் ஃப்ளார்- 3 தேக்கரண்டி

மலாய், துருவிய ஒயிட் சாக்லெட், தேங்காய்த் துருவல் டெசிகேடட்- தலா 2 தேக்கரண்டி

பிஸ்கட்- 15

பொடியாக நறுக்கிய பிஸ்தா- தேவையான அளவு

செய்முறை:

மாம்பழங்களைச் சுத்தம் செய்து தோல் நீக்கிக் கொள்ள வேண்டும். துண்டுகளைக் கூழாக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் பால், சர்க்கரை, சோளமாவு போட்டு நன்கு கலக்கவும்.

கட்டியில்லாமல் கலந்து இந்தக் கலவையை அடுப்பில் மிதமான தீயில் வைத்து, நன்றாகக் கிளற வேண்டும். சற்று தளர்வாக இருக்கும்போது, அடுப்பை அணைத்துவிடவும். கலவை சற்று ஆறியதும் அதனுடன் மலாய் கிரீமை சேர்க்கவும். இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி, சற்று ஆறியதும் மாம்பழக் கூழை சேர்த்து வைக்கவும்.

ஒரு கண்ணாடி பௌலில் முதலில் தூளாக்கிய பிஸ்கெட்டை பரப்பவும். அதன் மீது மாம்பழக் கலவையைப் பரப்ப வேண்டும். தேங்காயத் துருவல் தூவி, மறுபடியும் ஒரு லேயர் இழை இரண்டையும் போட்டு, இதன் மேல் துருவிய ஒயிட் சாக்லெட், மாம்பழத் துண்டுகள், பொடித்த பிஸ்கெட், பிஸ்கட் தூள் பரவலாகத் தூவி ஃப்ரிஜ்ஜில் செட் செய்யவும். நன்றாக செட் ஆனவுடன் பரிமாற சுவையான மேங்கோ கேக் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

லைட் ஹவுஸ்... ஷ்ருதி ஹாசன்!

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

SCROLL FOR NEXT