தேவையான பொருள்கள்:
உகுண்டை வெல்லம், கோதுமை மாவு- தலா 2 கிண்ணம்
அரிசி மாவு- அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள்- தேவையான அளவு
எண்ணெய்- அரை லிட்டர்
செய்முறை:
சிறிது தண்ணீரில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு பாகு எடுக்கவும். அது மிதமாக இருக்கும்போதே ஏலக்காய்த் தூள், கோதுமை மாவு, அரிசி மாவு கலக்கவும். கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி, நான்கு நாள்களுக்கு வேடு கட்டி, அப்படியே வைத்துவிடவும்.
ஐந்தாம் நாள் வாணலியில் எண்ணெய் ஊற்றி, பாகு மாவை உருண்டையாக உருட்டி, இலையில் நெய்யைத் தடவி அதில் வட்டமாக மெலிதாகத் தட்டவும். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.