மகளிர்மணி

எண்ணெய்க் கத்தரிக்காய்

கத்தரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைத் துண்டுகளாக நறுக்கவும்.

விஜி

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய்- 100 கிராம்

உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி- தலா ஒன்று

எண்ணெய், உப்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை- தலா ஒரு தேக்கரண்டி

அரைக்க:

பூண்டு- 5 பல்

மிளகாய் வற்றல்- 6

தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்

கசகசா, சோம்பு, சீரகம்- தலா ஒரு தேக்கரண்டி

செய்முறை:

கத்தரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைத் துண்டுகளாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு வறுத்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும். சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகாக உணர்கிறேன்... பாத்திமா சனா ஷேக்!

வழக்கமான லுக் இல்லைதான்... வினுஷா தேவி!

நவரத்னா அந்தஸ்தை பெற்ற நுமாலிகர் ரிஃபைனரி!

எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

உன் காதலில் நான் வாழ்ந்தேன்... க்ரித்தி சனோன்!

SCROLL FOR NEXT