ஆர் .ஜெ.
எலுமிச்சை சாறுடன் துளசி இலைச் சாற்றைக் கலந்து படை மீது தடவினால் போதும், படைமறைந்து விடும்.
ஒரு தேக்கரண்டி பன்னீர் எடுத்து கண்இமை முதலியவற்றின் மேல் மெதுவாக ஒத்தி எடுத்தால், கண் சோர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
கைகள் அழகு பெற எலுமிச்சைப் பழச்சாறு பிழிந்து கைகளில் பூசிக் கொண்டு அவை உலர்ந்த பிறகு பிறகு நீரில் கழுவி விட வேண்டும்.
தோல் வறட்சியாக இருந்தால் பால் ஏடு தடவி, பின் உலர்ந்தவுடன் சோப்புப் போட்டு வெந்நீரில் அலம்பி வந்தால், தோல் மிருதுவாகும் .
தும்மலைக் கட்டுப்படுத்த மிளகுத் தூள் செய்து புகையைச் சுவாசித்தால் உடனே நின்றுவிடும்.
நல்லெண்ணெய்யில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு சுட வைத்து இளஞ்சூடாகக் காதில் விட்டு வந்தால், காது வலி குணமாகும்.
விரலிமஞ்சளையும் வேப்பம் இலையையும் சேர்த்து நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து விடும் .
வாய் கசப்பாக இருந்தால், எலுமிச்சைப் பழச்சாறுடன் இஞ்சித் துண்டை ஊறவைத்துச் சாப்பிட்டால் நீங்கும்.
கண்களில் சுருக்கம், கருப்பு வளையும் இருந்தால் தினமும் படுக்கப் போகும் முன் தேயிலைத் தண்ணீர் கொண்டு கண்களைச் சுற்றிக் கழுவி வந்தால் அவை மறைந்து போகும்.
கிராம்பை தண்ணீர் விட்டு உறைத்து அந்தச் சாற்றை பரு உள்ள இடத்தில் தடவினால் பருமறைந்து போகும்.
எலுமிச்சம்பழச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நீர்க் கோவை நீங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.