மகளிர்மணி

பிரெட் உப்புமா

முதலில் காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி, பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

பிரெட்- 15 (ஸ்லைஸ்)

வெங்காயம்- 2

பீன்ஸ்-3

தக்காளி, உருளைக்கிழங்கு, காரட்- தலா 1

கொத்துமல்லி- சிறிதளவு

பச்சை மிளகாய்- 4

உப்பு, எண்ணெய், பச்சைப்பட்டாணி, நெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி, பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். பின்னர், அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடானதும் லேசாக நெய்விட்டு பிரெட் துண்டுகளை வாட்டி தூளாக உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் அல்லது நெய்விட்டு நறுக்கிய கொத்துமல்லி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி, காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். கடைசியாக தேவையான உப்புடன் பிரெட் தூளையும் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT