தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி - 5 கிண்ணம்
பச்சரிசி - 5 கிண்ணம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
உளுந்தம் பருப்பு - 5 கிண்ணம்
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் - 1 கிண்ணம் (துருவியது)
காய்ந்த மிளகாய் - 8
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவற்றை ஊறவைக்கவும். உளுந்தை தனியாக ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். பாதி அரைபடும்போதே காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து தோசை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.
இந்த மாவை சுமார் ஆறுமணி நேரம் புளிக்க வைத்து, அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடானதும், சிறிது எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்து எடுக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.