காலில் வெடிப்புகள் சரியாக...
விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, காலில் உள்ள வெடிப்புகள் மீது பூசி வந்தால் அவை மறையும்.
விமலா சடையப்பன்
விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, காலில் உள்ள வெடிப்புகள் மீது பூசி வந்தால் அவை மறையும்.
பாகற்காய் குழம்பு வைக்கும்போது, அதில் ஒரு கேரட்டை போட்டால் கசப்பே தெரியாது.
கடுக்காய் பொடியை பல்பொடியுடன் கலந்து, பல் தேய்த்துவர ஈறு வலி, வீக்கம், ரத்தம் கசிதல் சரியாகும்.
சேனைக்கிழங்கில் துவர்ப்பு குறைய, அதை புளி கலக்கிய நீரில் போட்டுவிட்டு சமையல் செய்யப் பயன்படுத்தலாம்.