மகளிர்மணி

வரகு அரிசி உப்புமா

வரகு அரிசியை ரவையாக உடைக்கவும். இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வரகு ரவையை வறுக்கவும்.

DIN, ஏ.மூர்த்தி

வரகு அரிசி- 2 கிண்ணம்

கடுகு, எண்ணெய், பெருங்காயம்- தேவையான அளவு

உளுந்து, கடலைப் பருப்பு- கால் மேசைக்கரண்டி

வெங்காயம்- 2

உப்பு, இஞ்சி, கருவேப்பிலை- சிறிதளவு

காய்ந்த மிளகாய்- 2

செய்முறை:

வரகு அரிசியை ரவையாக உடைக்கவும். இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வரகு ரவையை வறுக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மேற்கண்டவற்றை சேர்த்து தாளிக்கவும்.

அதனுடன் இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, நன்கு வதங்கியதும் நான்கு கிண்ணம் தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தும் ரவையைக் கொட்டி, நன்றாகக் கிளறவும். நன்றாக வெந்ததும் கிளறி இறக்கவும். சுவையான வரகு அரிசி உப்புமா ரடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT