முகப்பு
மகளிர்மணி

பெண்களே கவனியுங்க...

பெண்களைச் சங்கடப்படுத்தும் பல்வேறு பிரச்னைகளுக்கு எளிய மருத்துவ முறையில் தீர்வுகள் உண்டு.

Updated On : 3 பிப்ரவரி, 2025 at 3:02 PM
கோப்புப்படம்
பகிர்:

பெண்களைச் சங்கடப்படுத்தும் பல்வேறு பிரச்னைகளுக்கு எளிய மருத்துவ முறையில் தீர்வுகள் உண்டு.

கரும்புள்ளி மறைய..:

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி கவலை தருகிறதா? பயப்பட தேவையில்லை. ஒரு கிண்ணத்தில் ஒரு புதிய கற்றாழை இலையிலிருந்து ஜெல்லைப் பிரித்தெடுக்க வேண்டும். பின்னர், அதை முகத்தில் உள்ள கரும்புள்ளி அல்லது தழும்புகள் மீது தடவி இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.

காலையில் எழுந்ததும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி கற்றாழை ஜெல்லை தொடர்ந்துப் பயன்படுத்துவதால் சருமம் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

முகம் பிரகாசமாக..:

முகம் பொலிவாக இருக்க ஆரஞ்சு தோல்களை உலர்த்தி, அதை பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் அதனுடன் சிறிது பால் சேர்த்து ஒரு பேஸ்ட்டை தயார் செய்யவும்.

இந்தக் கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் பொலிவாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.