முகப்பு
மகளிர்மணி

சாதனைப் பெண்கள்...

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக, இருபத்து ஏழு வயதான கரோலின் லீவிட் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 15 பிப்ரவரி, 2025 at 6:31 PM
பகிர்:

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக, இருபத்து ஏழு வயதான கரோலின் லீவிட் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் தனது நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கரோலின் லீவிட் நியமிக்கப்பட்டுள்ளார். 'சிறந்த புத்திசாலியான கரோலின் லீவிட் பயனுள்ள செய்தித் தொடர்பாளராக இருப்பார்' என்று டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

லெபனான் அதிபராக ஜோசப் அவுன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். பெண் நிருபரான நஜாத்சர பெடின் என்பவரை தனது செய்தித் தொடர்பாளராக ஜோசப் அவுன் நியமித்துள்ளார். அந்நாட்டில் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.