நகை 
மகளிர்மணி

நகைகளைப் பராமரிக்கும் முறைகள்!

தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும், சுப காரியங்கள் முதல் அனைத்து விசேஷங்களுக்கும் நகை வாங்குவோம்.

DIN

தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும், சுப காரியங்கள் முதல் அனைத்து விசேஷங்களுக்கும் நகை வாங்குவோம். அந்த நகைகளைச் சுத்தமாகவும் நீண்ட நாள்களுக்குப் புதிது போல் எப்படி பராமரிப்பது தெரியுமா?

அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்திருக்கும். இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தரமான ஷாம்பு அல்லது சோப்புத் தூளால் தேய்த்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

எப்போதாவது ஒருமுறை அணியும் ஆரம், நெக்லஸ், கல் வளையல் போன்ற நகைகளை ஒன்றோடு ஒன்று உரசாமலும், வளையாமலும் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நகைப் பெட்டிகளில் தனித்தனியாக வைத்துகொள்ளுங்கள்.

வெள்ளி ஆபரணங்கள் வைத்துள்ள இடத்தில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால், வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தவிர்க்கலாம். மேலும், அதனை அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்கவிட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும்.

முத்துகள் பதித்த நகைகளை நீரில் அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும்.

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!

பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட தொண்டர்: தாயின் விடியோ குறித்து இளைஞர் விளக்கம்!

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஆற்றைக் கடக்க ஆட்டுத்தோலைப் பயன்படுத்திய அசிரியன் போர் வீரர்கள்!

SCROLL FOR NEXT