தேவையானவை:
சுக்குப்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 2- இரு மேசைக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
அரைக்க: வெற்றிலை , கற்பூரவல்லி இலை, எலுமிச்சை இலை - தலா 2 இலைகள்
துளசி - ஒரு கைப்பிடி, சித்தரத்தை இலை (அ) பொடி - ஒரு தேக்கரண்டி (அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்).
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கி, சுக்குப்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து, இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும். இதை சூடான சாதத்தில் பிசைந்தும், இட்லிக்குத் தொட்டும் சாப்பிட சுவை அள்ளும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.