எங்களால் மெதுவாகவே நடக்க முடியும். இருந்தாலும், அடுத்த சுற்றுலா எங்கு போகலாம் என்று தகவல்களைச் சேகரித்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சுற்றுலாவையும் முழுமையாக அனுபவிக்க விரும்புகிறோம்'' என்கின்றனர் சகோதரிகள் எண்பத்து ஆறு வயதான வல்சலா, எண்பத்து நான்கு வயதான ரமணி.
இந்தச் சகோதரிகள் கேரளம் திருச்சூருக்கு அருகே வடக்கஞ்சேரியில் தங்கியுள்ளனர். தங்களது கணவர் இறந்தவுடன் சகோதரிகள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். வல்சலா அரசு வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.
அவர்கள் கூறியது:
ஒவ்வொரு சுற்றுலா பயணத்தையும் தியானம் போல உணர்கிறோம். எங்களுக்கு இருக்கும் நோய்களை, கவலைகளை மறந்துவிடுகிறோம். இதுவரை சுமார் 80 நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறோம். காஷ்மீருக்குச் சென்றதிலிருந்து ஸ்விட்சர்லாந்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஜெர்மனியில் பணிபுரியும் எங்கள் பேரன் கௌதமின் அழைப்பின்பேரில், சுவிட்சர்லாந்தை ஆசை தீரப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு முன் ஊர் திரும்பினோம்.
எழுபது வயதைக் கடந்தபோது, எனக்குள் ஊரைச் சேர்ந்த ஆன்மிக நண்பர்களுடன் வாரணாசி, பத்ரிநாத், துவாரகா உள்ளிட்ட பல புனிதத் தலங்களுக்குச் சென்றோம். பிறகு உறவினர்களோடு சேர்ந்து கம்போடியா, சிங்கப்பூர், வியத்நாம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்குச் சென்றுவந்தோம். ஐரோப்பா நாடுகளுக்கும் சென்றிருந்தோம். ஆங்கிலம் சரிவர பேசத் தெரியாவிட்டாலும், ஐரோப்பாவில் சமாளித்தோம்.
ஜெர்மனி சுற்றுப்பயணம் சுறுசுறுப்பாக அமைந்தது. சுவிட்சர்லாந்தில் கேபிள் கார் பயணத்தின்போது உற்சாகமாக இருந்தோம். ஆல்ப்ஸ் மலை சிகரங்களைப் பார்த்து மலைத்தோம். பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தைப் பார்த்தபோது, எங்கள் முகம் பிரகாசித்தது.
வெளிநாடுகளில் அசைவ உணவு அதிகம். சைவ உணவைச் சாப்பிடும் எங்களுக்கு ஒரு குறையாகப்படவில்லை. ரொட்டி, தயிர், வேக வைத்த காய்கறிகள், பழங்கள், பிஸ்கட், பால், காபி, தேநீர் கொண்டு சமாளித்தோம்.
நகரங்களில் டிராம்கள், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி நாங்கள் பயணித்தோம். மொழி பிரச்னையாகத் தெரியவில்லை. எங்களுடன் வந்த பயணக் குழுவும் எங்கள் வயோதிகத்தை மதித்து பழகினர். அடுத்து எங்கு செல்வோம் என்று எங்களுக்குத் தெரியாது'' என்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.