மகளிர்மணி

ராஜஸ்தானி மாங்காய் ஊறுகாய்

ராஜஸ்தானி மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

அ. யாழினி பர்வதம்

தேவையான பொருள்கள்:

மாங்காய்- 1 கிலோ

மிளகாய்- கால் கிலோ

வெந்தயம்- 200 கிராம்

மஞ்சள் தூள்- 4 தேக்கரண்டி

பெருங்காய்த் தூள்- 2 தேக்கரண்டி

நல்லெண்ணெய்- முக்கால் கிலோ

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

மிளகாயைக் கிள்ளி வெந்தயத்துடன் வெயிலில் காயவைத்து, மிளகாயை விதையுடன் திப்பி திப்பியாக இடித்து அள்ளி வைக்கவும். வெந்தயத்தை சற்று பெரிய ரவை போல ஒன்றிரண்டாக உடைக்கவும். ஒரு பெரிய தட்டில் மிளகாய் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயத் தூள், மஞ்சள் பொடி, உப்பை தனித்தனியாக வைத்து, கொஞ்சமாகக் கலக்கவும்.

மாங்காயை கழுவித் துடைத்து நான்கு பாகங்களாக முழுவதும் வெட்டுப் படாமல் வெட்டி, கலந்த மசாலா கலவையை ஒவ்வொன்றிலும் நிறைய அடைத்து, ஒரு ஜாடிக்குள் அடுக்கவும். மீதமுள்ள பொடியையும், அதன் மேல் பரவலாகக் கொட்டிவிடவும்.

எண்ணெய் அடுப்பில் புகைய, புகைய சூடேற்றி வைக்கவும். சுமார் 10 அல்லது 12 மணி நேரம் கழித்து, ஜாடியில் ஊற்றி எண்ணெயில் மாங்காய் முழுவதும் மூழ்கியிருக்கும்படி நன்றாகக் கிளறி இறுக்க மூடிவிடவும். ஒரு மாதம் கழித்து உபயோகித்தால், வித்தியாசமான ஊறுகாய் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

SCROLL FOR NEXT