மகளிர்மணி

சமையல் குறிப்புகள்..

கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே கொஞ்சம் மில்க் மெய்ட் ஊற்றிக் கிளறினால், அல்வா நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

DIN

கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே கொஞ்சம் மில்க் மெய்ட் ஊற்றிக் கிளறினால், அல்வா நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

கிச்சடி தயாரிப்பவர்கள் தண்ணீர் ஊற்றும் அளவில் பாதியளவு தேங்காய்ப் பால் சேர்த்து செய்தால், அதன் சுவையே அலாதி.

அரிசி பாயசம் தயாரிக்கும்போது ரோஜா எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால், சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

லேசாகச் சுடும் நீரை பயன்படுத்தி, புட்டுமாவை பிசைந்தால், புட்டு மிருதுவாக இருக்கும்.

பீர்க்காங்காய் சீவிய தோலை எண்ணெய் ஊற்றி வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பட்டாணியை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி சர்க்கரையை அதில் சேர்த்துவிட பட்டாணி வேக, வேகச் சுவையாக இருக்கும்.

குறைந்த அளவு எள் சேர்த்து, கீரையும் வேகவிட்டால் கீரை பசுமை மாறாமல் இருக்கும்.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

SCROLL FOR NEXT