மகளிர்மணி

மாங்காய் - ஸ்டஃப்டு பாகற்காய்

முதலில் பாகற்காய்களை நீரில் நன்கு கழுவி நறுக்கவும். பின்னர் அதில் உள்ள விதைகளை நீக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும்.

பிரபா

தேவையான பொருள்கள்:

பாகற்காய்- 5

மாங்காய்- 1

கடலை மாவு- ஒரு கிண்ணம்

எண்ணெய்- 2 தேக்கரண்டி

மல்லி சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி, துருவிய தேங்காய்- தலா 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி- கால் தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாகற்காய்களை நீரில் நன்கு கழுவி நறுக்கவும். பின்னர் அதில் உள்ள விதைகளை நீக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும். மாங்காயைத் துருவி ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் தேங்காய் துருவல், மல்லி-சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்தக் கலவையில் பாகற்காயைப் போட்டு பிசறவும். இப்போது அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மெதுவாக பாகற்காய்களை ஒவ்வொன்றாக அதில் சேர்க்கவும். பின்னர், தயாரிக்கப்பட்ட கலவையை அதன் மீது சேர்க்கவும். நன்றாக வேகும் வரை வைத்திருந்து, அடுப்பை அணைக்கவும். சூடான மாங்காய்- ஸ்டஃப்டு பாகற்காய் கறி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

SCROLL FOR NEXT