தினை இனிப்பு பணியாரம்
தினை அரிசி, சிவப்பரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் இந்த நான்கையும் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு அரைக்கவும்.
தேவையான பொருள்கள்:
தினை அரிசி - 2 கிண்ணம்
உளுத்தம்பருப்பு , சிவப்பரிசி -தலா 1 கிண்ணம்
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
வெல்லம் - 2 1/2 கிண்ணம்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
தினை அரிசி, சிவப்பரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் இந்த நான்கையும் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு அரைக்கவும்.
வெல்லத்தையும் கரைத்து இந்த மாவில் சேர்க்கவும். பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய்விட்டு, மாவை ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.