தேவையான பொருள்கள்:
பச்சரி- 1 கிண்ணம்
வெள்ளை உளுந்து- அரை கிண்ணம்
பெருங்காயத் தூள்- 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
கடுகு- கால் மேசைக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு- அரை மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரிசியை வேகவைத்து, பின்னர் ஆறவைத்து சாதத்தை உதிரியாக்கவும். உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, அரைத்த மசாலா விழுதைச் சேர்க்க வேண்டும். மிதமான தணலில் சிறிது நேரம் வதக்கவும். கறிவேப்பிலையை அரிந்து, சாதத்துடன் மேல் தூவவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.