முகப்பு
மகளிர்மணி

சிறு தானிய அடை!

சிறு தானிய அடை செய்வது எப்படி?

Updated On : 23 மே, 2025 at 1:21 PM
பகிர்:
Updated On : 23 மே, 2025 at 1:14 PM

சிறு தானிய அடை செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, தினை அரிசி, பாசிப் பருப்பு- தலா 200 கிராம்

Advertisement

மிளகு- 30

மிளகாய் வற்றல்- 4

துவரம் பருப்பு- 100 கிராம்

இஞ்சி - 1 துண்டு

பூண்டு- 6 பல்

முருங்கை இலை- ஒரு கைப்பிடி

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

பெருங்காயப் பொடி- அரை தேக்கரண்டி

Updated On : 23 மே, 2025 at 1:17 PM

செய்முறை:

சாமை அரிசி, தினை அரிசி, குதிரைவாலி அரிசி எல்லாம் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பாசிப்பருப்பு, துவரம் பகுப்பையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசியுடன் மிளகு, மிளகாய் வற்றல், இஞ்சி தோல்வி சீவியது பூண்டு பல் நறுக்கிப் போட்டு ரவை பதத்துக்குக் கரகரப்பாக அரைக்க வேண்டும். துவரம் பருப்பையும், பாசிப் பருப்பையும் தனியாக அரைத்து அரிசி மாவையும் கலந்து தேவையான உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்து முருங்கை இலை நறுக்கி, மாவுடன் கலந்து தோசைக் கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் மாவை சிறிது கனமாக ஊற்றி, பரவலாக எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.