அவல் உசிலி
தக்காளியை வெந்நீர் ஊற்றி, சிறிது நேரம் கழித்து தோல் உரித்து, ஜூஸ் எடுக்க வேண்டும்.
தேவையான பொருள்கள்:
அவல், தக்காளி- தலா 400 கிராம்
பச்சை மிளகாய்- 15
Advertisement
Advertisement
கறுப்பு எள், சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, வெல்லம் பொடித்தது, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு- தலா 1 மேஜை கரண்டி
வேர்க்கடலைப் பருப்பு- 1 பிடி
வெங்காயம்- 5
எலுமிச்சம் பழம்-1
கொத்துமல்லித் தழை- 1 கட்டு
தேங்காய்- 1 மூடி
கறிவேப்பிலை- 1 ஆர்க்கு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை வெந்நீர் ஊற்றி, சிறிது நேரம் கழித்து தோல் உரித்து, ஜூஸ் எடுக்க வேண்டும். அவலை பொடி செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் தக்காளி ஜூஸ், பொடித்த அவல், மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு, பொடித்த வெல்லம், பெருங்காயப் பொடி, தண்ணீர் கலந்து அடுப்பில் வைக்க வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய்விட்டு கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாயை வதக்கி, அவலை அதில் போட்டு பொடித்த எள்ளையும் போட்டு நன்றாகக் கிளறவேண்டும். அதில் உப்பு சேர்த்து, தேங்காய்த் துருவலையும் போடவேண்டும். கீழே இறக்கும் முன்பு எலுமிச்சம் பழச்சாறைப் பிழிந்து இறக்கிவுடன் கொத்துமல்லியைத் தூவ வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.