தேவையான பொருள்கள்:
பசலைக் கீரை- 1 கட்டு
தயிர்- 100 கிராம்
வெங்காயம்- 2
மிளகுத் தூள், கரம் மசாலா- தலா 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம்- 1
நெய்-2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நறுக்கி வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு கீரையைச் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர்விட்டு வேக வைத்து எடுத்து, அதில் உப்பு, தயிர், மிளகு பொடி, கரம் மசாலா, எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.