மகளிர்மணி

சம்பா ரவை தோசை

முதலில் சம்பா ரவையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியவுடன் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

சம்பா ரவை- 300 கிராம்

உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி- தேவையான அளவு

இஞ்சி- 1 சிறிய துண்டு

பச்சை மிளகாய்-4

தக்காளி- 3

செய்முறை:

முதலில் சம்பா ரவையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியவுடன் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். அந்த சம்பா ரவையுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரை விட்டு கலந்து கரகரப்பாக அரைக்கவும்.

இத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, சூடானதும் சிறிது எண்ணெய்விட்டு தோசைகளாக வார்த்துத் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT