பாதாம், தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து நுனி முடிவில் தடவிக் கொள்வதால் பிளவுகள் ஏற்படாது.
வசம்பைத் தீயில் சுட்டு, காய்ச்சிய எண்ணெயில் போட்டு தடவி வந்தால், பேன், பொடுகு வராது.
தலையில் சீப்பு போட்டு வாரும்போது, முன் நெற்றியில் படும்படி வாரக் கூடாது. இதனால் முன்நெற்றிப் பகுதியில் முடி உதிர்ந்து வழுக்கைக்கு வித்திடுவதுடன் பருக்கள் வரவும் வாய்ப்புகள் அதிகம்.
தலைமுடியை தூக்கி வாராதீர்கள். இதனால் முன்நெற்றி பகுதியானது பெரியதாகக் கூடும். தழைத்து வாருவது நல்லது.
இரவு படுக்கைக்குப் போகும்போது எண்ணெய் தடவி தலையை நன்றாக வாரி, சற்றே தளர்வாகப் பின்னல் போட்டுக் கொள்வது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
தலைமுடியை இழுத்து, இறுக்கமாகப் பின்னுவதோ, கட்டுவதோ கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.