முகப்பு
மகளிர்மணி

ஓட்ஸ் ஓமப்பொடி

கடலை மாவையும், ஓட்ஸ் மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு கையால் கசக்கிய ஓமம், உப்பு, பெருங்காயம், நெய் சேர்த்துக் கலந்து நீர் சேர்த்து மாவாகப் பிசையவும்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:28 AM
ஓட்ஸ் ஓமப்பொடி
பகிர்:

தேவையான பொருள்கள்:

ஓட்ஸை பொடித்த மாவு - கால் கிண்ணம்

கடலை மாவு - ஒரு கிண்ணம்

பெருங்காயம் - கால் மேஜை கரண்டி

ஓமம் - ஒரு மேஜை கரண்டி

நெய் - 2 மேஜை கரண்டி

உப்பு - திட்டமாக

பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவையும், ஓட்ஸ் மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு கையால் கசக்கிய ஓமம், உப்பு, பெருங்காயம், நெய் சேர்த்துக் கலந்து நீர் சேர்த்து மாவாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஓமப்பொடி அச்சு போட்டு, முறுக்கு உழக்கில் கட்டி மாவைப் போட்டு ஓமப்பொடியாகப் பிழிந்து எடுக்கவும். நல்ல கரகரப்பான ஓட்ஸ் ஓமப்பொடி தயார்.

கே நாகலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.