மழையும், வெயிலும் எதிரெதிர் துருவங்கள். ஒன்று இருக்கும்போது மற்றொன்று இருக்காது. சரி, எல்லாவற்றுக்கும்தான் விதிவிலக்கு உண்டே. இரண்டும் ஒரே நேரத்தில் இருந்தால் என்ன நடக்கும்? அப்போது ஏற்படுவதுதான் வானவில் எனும் இயற்கை அதிசயம்.
÷வானத்துக்கு வண்ணமடித்துவிட்டது போல வானவில் தோன்றும். நீங்கள் வானவில்லைப் பார்த்திருப்பீர்கள். வானவில் எப்படி உருவாகிறது என்று யோசித்திருக்கிறீர்களா? கிரேக்கத் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் வானவில்லை விளக்க முயற்சித்திருக்கிறார்.
÷சூரியனின் ஒளியை மழை பிரதிபலிக்க முயற்சிப்பதே வானவில் என்று அவர் தவறாகக் கருதினார். ஏற்கனவே நாம் பார்த்தது போல வெண்மை நிறம் அல்லது சூரியனில் இருந்து வரும் ஒளி என்பது சிவப்பு, பச்சை, நீலம் என அனைத்து நிறங்களுமுடைய கலவைதான். ÷அதாவது, பல்வேறு அலைநீளங்கள் கொண்ட பல நிறங்களின் கூட்டுதான் வெண்மை நிறம். ஒரு கண்ணாடியின் விளிம்பிலோ, சோப்பு நுரைக் குமிழின் மீதோ, தோட்டத்துக்கு தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்போதோ, அதன் மீது ஒளி படும்போது அந்த வெண்மை நிறம் துண்டாக்கப்படுகிறது. இதன் விளைவாக நிறப்பிரிகை ஏற்பட்டு, ஏழுநிறங்கள் கொண்ட ஒளிப்பட்டையைப் பார்க்க முடிகிறது.
÷இயற்பியல் பரிசோதனைகளில், முக்கோணப் பட்டகம் வழியாக ஒளியைச் செலுத்தினால், அது ஏழு நிறங்களாகப் பிரியும். இந்த முக்கோணப் பட்டகம் மழைத்துளி போலச் செயல்படுகிறது. மழைத்துளிகளுக்குள் சூரிய ஒளி புகும்போது ஒளிவிலகல் ஏற்படு
கிறது. மேல் மட்டத்தில் உள்ள மழைத்துளிகள் அதிக அலைநீளமுடைய சிவப்பையும் (மஞ்சள், ஆரஞ்சு,
சிவப்பு), இடைப்பட்ட மழைத்துளிகள் பச்சை நிறத்தையும், அடியில் உள்ள மழைத்துளிகள் குறைந்த அலைநீளம் உள்ள நீல நிறத்தையும் (ஊதா, கருநீலம், நீலம்) பிரியச் செய்கின்றன. ÷இந்த மூன்று நிறங்களும் சேர்ந்துதான் வெண்மை நிறத்தை உருவாக்குகின்றன என்பது நமக்குத் தெரியும். கோடிக்கணக்கான மழைத்துளிகள் இந்த நிறங்களைப் பிரியச் செய்வதால் நிறப்பிரிகை ஏற்படுவதுடன், மீண்டும் அவற்றைப் பிரதிபலிக்கவும் செய்கின்றன. அப்போதுதான் வானவில் உருவாகிறது. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு (யஐஆஎவஞத) என்ற வகையில் வானவில்லின் நிறம் இருக்கும்.
÷ஏதாவது ஒரு பக்கம் சூரிய ஒளி, நடுவில் மழை, எதிர்ப்புறம் வானவில் என்ற வகையில்தான் தோன்றும். இது கிட்டத்தட்ட நேர்கோடு போலிருக்க வேண்டும். அதாவது, சூரியன் உங்களுக்குப்
பின்னால் இருக்கும் நிலையில், மழை உங்களுக்கு முன்னால் பெய்தால் மட்டுமே வானவில் தோன்ற வாய்ப்பிருக்கிறது.
÷இதன் காரணமாகவே, காலை மாலையில்தான் பெரும்பாலும் வானவில் தோன்றும். காலையில் கிழக்கில் சூரியன் இருக்கும்போது, மழை பெய்தால் மேற்கில் வானவில் தோன்றும். மாலையில் மேற்கில் சூரியன் இருக்கும்போது,மழை பெய்தால் கிழக்கில் வானவில் தோன்றும். சூரியன் உச்சியில் இருக்கும்போதோ, வானத்தின் நடுவில் இருக்கும்போதோ வானவில் தோன்றுவதில்லை.
÷நமது தலைக்கு மேலே சூரியன் இருப்பதால், நமது பார்வைக் கோணம் 180 டிகிரியாகி விடுகிறது. இதனால், வானவில் எப்பொழுதும் அரைவட்டமாகவே இருக்கிறது. மீதி 180 டிகிரி நமக்குக் கீழே இருக்கிறது. அங்கு ஒளிவிலகல் நடப்பதில்லை. அதனால், நாம் அதைப் பார்க்கவும் முடியாது. சூரியஒளி படும் முறை, மழை பெய்யும் முறை காரணமாக சில நேரம் கால்வாசி பட்டையாகக்கூட வானவில் தெரியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.