ப ள்ளிக்குச் செல்ல நீங்கள் வைத்திருக்கும் பை அல்லது ஊருக்குச் செல்ல நீங்கள் எடுத்துச் செல்லும் பை மற்றும் பேனா, பென்சில், ரப்பர் போட்டு வைக்க பயன்படுத்தும் கைப்பை போன்றவற்றின் மேற்புறத்தை நீங்கள் "சர்... சர்...' என்று இழுத்து மூடுகிறீர்கள். இப்படி வேகமாகவும், கொஞ்சம் ஸ்டைலாகவும் பையை மூடுவதற்கு ஜிப் (ழண்ல்)பயன்படுகிறது.
சாதாரணமாக, ஜிப்பில் எதிரெதிரில் இரண்டு வரிசை உலோக அல்லது செயற்கை (பிளாஸ்டிக்) பற்கள் இருக்கும். இவை வலுவான துணியில் தைக்கப்பட்டிருக்கும். இந்தப் பற்கள் சுருள் வடிவிலோ அல்லது பந்து-பை வடிவிலோ இருக்கலாம்.
ஜிப்பின் மீது வழுக்கிச் செல்லும் ஜிப் காதை (ஸ்லைடர்) பிடித்து இழுக்கும்போது, இந்த இரண்டு பல்வரிசைகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்படுகின்றன. இந்த ஸ்லைடர் முன்புறமாகவோ, பின்புறமாகவோ வெளியே நழுவி வந்துவிடாமல் இருக்க, பையின் இறுதியில் தைக்கப்பட்டு விடுகிறது.
இந்த ஜிப் பல் ஒவ்வொன்றிலும் அதன் மேற்புறம் சிறிதளவு துருத்திக் கொண்டிருக்கும். அதேநேரம், அடிப்பகுதி குழியாக இருக்கும். ஒன்றில் துருத்திக் கொண்டிருக்கும் மேற்பகுதி, மற்றொன்றின் குழியில் சென்று உட்கார்ந்து கொள்வதன் காரணமாக, பையை இறுக்கமாக மூடிவிட முடிகிறது.
அதேநேரம், ஸ்லைடரை எதிர்ப்பக்கம் இழுத்தால், குழியிலிருந்து துருத்திய பகுதி விடுபட்டு ஜிப் திறந்து கொள்கிறது. இந்த ஜிப் பற்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தேய்ந்துவிட்டால், அவற்றை சரியாக இழுத்தாலும் மூடவராது. அப்பொழுது, சுலபமாக வழுக்கிச் செல்வதற்காக மெழுகு அல்லது எண்ணெய் தேய்க்கலாம். அப்படித் தேய்த்த பிறகும் அவை சரியாக மூட வரவில்லை என்றால், பற்கள் பிடிமானத்தை இழந்துவிட்டன என்று அர்த்தம். புது ஜிப்தான் பொருத்தியாக வேண்டும்.
ஜிப் அதிகம் தேயாமல் இருக்க, அதை ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். எவ்வளவு அதிகம் அதைப் பயன்படுத்துகிறோமோ, அவ்வளவு வேகமாக அது தேய்ந்துவிடும்.
ஜிப் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு சுவாரசியமான கதை. தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த "எலியாஸ் ஹோவே' என்பவர்தான் 1851-ம் ஆண்டே ஜிப்பின் முன்மாதிரியையும் கண்டுபிடித்துவிட்டார்.
ஆனால், தையல் இயந்திரம் அமோக வரவேற்பைப் பெற்றவுடன், ஜிப்பை அம்போ என்று விட்டுவிட்டார். 44 ஆண்டுகளுக்குப் பின் சிகாகோவைச் சேர்ந்த விட்காம்ப் ஜட்சன் 'இப்ஹள்ல் கர்ஸ்ரீந்ங்ழ்' என்ற பெயரில் ஜிப்பைக் கண்டுபிடித்து பெயரைத் தட்டிச் சென்றார். பாரா அதற்குப் பிறகு, ஸ்வீடனில் பிறந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த மின்பொறியாளர் "கிடியோன் சண்ட்பேக்', நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் நவீன ஜிப்பை 1913-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். அதை உற்பத்தி செய்யும் இயந்திரத்தையும் அவரே கண்டுபிடித்தார்.
ஆரம்ப காலத்தில் பூட்ஸ், புகையிலை பைகளை மூடத்தான் இந்த ஜிப் பயன்படுத்தப்பட்டது.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகே அதை ஆடைகளில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். குழந்தைகள் தாங்களே உடை அணிந்துகொள்ள ஜிப் வசதியாக இருக்கும் என்ற பெயரில்தான் ஆடையுலகுக்குள் ஜிப் நுழைந்தது.
அதன் பிறகு, பட்டன்களை வீழ்த்தி ஜிப் ஆட்சி செலுத்த ஆரம்பித்தது.
இன்றைக்கு உடைகள், தோல் பொருள்கள், பைகள் என பல்வேறு இடங்களில் ஜிப் பயன்படுத்தப்படுகிறது.
இப்பொழுது, இரண்டு ஜிப் காதுகள் பொருத்தப்பட்டு, பையை பாதுகாப்பாக பூட்டிக்கொள்ளும் வசதி வரை வந்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.