சிறுவர்மணி

காலம்

நாம் வாழும் இந்தப் பூமியின் வயது பதினெட்டுக் கோடி ஆண்டுகள். தொடக்க காலத்தில் ஒரே நிலப்பகுதியாகத்தான் பூமி இருந்தது. பிறகுதான் கண்டங்கள் உருவாக ஆரம்பித்தன. மொத்தம் ஏழு கண்டங்கள். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப

ஆர்.தமிழ்செல்வி

நாம் வாழும் இந்தப் பூமியின் வயது பதினெட்டுக் கோடி ஆண்டுகள். தொடக்க காலத்தில் ஒரே நிலப்பகுதியாகத்தான் பூமி இருந்தது. பிறகுதான் கண்டங்கள் உருவாக ஆரம்பித்தன. மொத்தம் ஏழு கண்டங்கள். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா. ஒவ்வொரு கண்டத்துக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு.

ஆசியா போல் ஆப்ரிக்கா இல்லை. ஆஸ்திரேலியா போல் அண்டார்டிகா இல்லை. ஒருபக்கம் பாலைவனம் மற்றொரு பக்கம் பசும்சோலை. இங்கே பகல், அங்கே இரவு.

மற்ற கண்டங்களோடு ஒப்பிடும்போது வட அமெரிக்கா பற்றி குறைந்த தகவல்களே ஆரம்பத்தில் கிடைத்தன. ஆனால், வட அமெரிக்கா, பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. கொலம்பஸôல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அமெரிக்கா என்ற அழகான தேசம் உலகத்துக்குத் தெரிந்தாலும், 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் மனிதனின் கால் தடங்கள் பதிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

கொலம்பஸ் 1492-ல் ஆசியாவுக்குக் குறுக்கு வழி தேடிச் செல்லும்போது அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். 1498, ஜூலை மாதம் டிரினிடாட் என்னும் இடத்தைக் கண்டுபிடித்தார். இதே ஜூலை மாதத்தில்தான் பால்டிமோர் நகரமும் உருவானது.

ஒரு காலத்தில் ஊசிகள் முட்களாலும் எலும்புகளாலும் செய்யப்பட்டு வந்தன. செருப்புத் தைக்கும் தொழிலாளிகள் பயன்படுத்தும் ஊசிகளான அவைகளுக்குக் "காது' கிடையாது. முதன்முதலில் "காது' வைத்த ஊசிகள் ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்த சொல்யூட்ரியர் என்ற இனத்தவரால் கண்டுபிடிக்கப்பட்டன. கற்கள், உலோக ஊசிகள்... என்று பின்னர் வந்தன. தையல் இயந்திரத்தை முதன் முதலாக உருவாக்கியவர் யார் தெரியுமா? 1790-ல் தாமஸ் செயின்ட் என்பவர்தான் மரத்தால் ஆன தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். ஆனால் இதிலிருந்த ஊசிக்குக் "காது' இல்லை. இவருக்குப் பின் ஜூலை 9, 1819-ல் பிறந்த எலியஸ் ஹாவி என்பவர் தையல் இயந்திரத்தை நவீனப்படுத்தினார்.

1863-ம் ஆண்டு, ஜூலை மாதம் 30-ம் தேதி பிறந்த ஹென்றி ஃபோர்ட் தன்னுடைய ப மாடல் கார் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார். வாகன வடிவமைப்பில் சிறந்து விளங்கிய இவரின் கண்டுபிடிப்பு, இவருக்குப் பெரும் செல்வத்தையும் புகழையும் தேடிக் கொடுத்தது. கற்கை நன்றே கற்கை நன்றே என்று ஏழைக் குழந்தைகள் பசியில் வாடாமல் கல்வி பெறவேண்டும் என சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ல் பிறந்தார். கல்வியில் பல புதிய மாற்றங்களைக் கொண்டுவந்த இவருடைய  பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறார்கள்.

"எலியாரே... எலியாரே... எங்கே போறீங்க?' என்று குழந்தைகள் குதூகளித்துப் பாடும் பாடலின் கதாநாயகன் எலி. எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் இது வாழும். பெரும்  நகரங்களில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும் இவை இருக்கும். குடிசை வீடுகளிலும் இருக்கும். அத்தகைய எலியை ஒரு கார்ட்டூன் கதாபாத்திரமாக்கி "மிக்கி மவுஸ்' என்று அதற்குப் பெயர் வைத்தவர் வால்ட் டிஸ்னி.

இவர் உருவாக்கிய மிக்கி மவுஸ் கதாபாத்திரம் இவருக்குப் புகழையும் வசதியையும் வாரி வழங்கியது. குழந்தைகள் மேல் அதிக பாசமும் பரிவும் கொண்ட வால்ட் டிஸ்னி, குழந்தைகள் விளையாடிக் கொண்டாடும் விதமாக ஒரு கேளிக்கைப் பூங்காவை உருவாக்கினார். அமெரிக்காவில் "டிஸ்னி லாண்ட்' 1955-ம் ஆண்டு ஜூலை 15-ல் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

SCROLL FOR NEXT