சிறுவர்மணி

காலம்

சென்ற இதழ் தொடர்ச்சி... மக்கள், ஜூலியன் காலண்டரை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்தனர். கி. பி. 1577-ஆம் ஆண்டில் "போப் கிரிகரி' என்பவர், ஜூலியன் காலண்டரில் பல சீர்திருத்தங்கள் செய்து ஒரு புதிய காலண்

ஆர்.தமிழ்செல்வி

சென்ற இதழ் தொடர்ச்சி...

மக்கள், ஜூலியன் காலண்டரை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்தனர். கி. பி. 1577-ஆம் ஆண்டில் "போப் கிரிகரி' என்பவர், ஜூலியன் காலண்டரில் பல சீர்திருத்தங்கள் செய்து ஒரு புதிய காலண்டரைக் கொண்டு வந்தார். அதுவே "க்ரிகோரியன் காலண்டர்' என்று அழைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் பல இக்காலண்டரையே பயன்படுத்த முடிவு செய்தன. ஆனால் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்தக் காலண்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

   சிலர் இந்தக் காலண்டரில் ஏதோ தவறு இருப்பதாக நினைத்தார்கள். மேலும் சிலர், இதில் மாற்றம் தேவை என்று கூறினார்கள். அதன்படி, க்ரிகோரியன் காலண்டரில் முதல் மாதமாக விளங்கிய "மார்ச்', மூன்றாவது மாதமானது.

"ஜனவரி', வருடத்தின் முதல் மாதமாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்களை ஆதரித்து பல நாடுகள் இந்தக் காலண்டரைப் பின்பற்றின.

   1793-ஆம் ஆண்டு பிரெஞ்சுக் குடியரசு, காலண்டரில் சில மாற்றம் செய்து பயன்படுத்தியது. ஆனால், இதெல்லாம் சில வருடங்கள்தான். பேரரசர் நெப்போலியன் ஆட்சிக்கு வந்ததும் பிறப்பித்த முதல் உத்தரவே, "அனைவரும் க்ரிகோரியன் காலண்டரைப் பின்பற்ற வேண்டும்' என்பதுதான்.

   1806-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து க்ரிகோரியன் காலண்டர் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. முதலில் இதைப் பின்பற்றத் தயங்கிய சீனர்கள், பிறகு ஏற்றுக் கொண்டனர். ஆனால் மாதங்கள், வருடங்கள் ஆகியவற்றுக்கு, மிருகங்களின் பெயர்களைச் சூட்டி அழைக்கும் வழக்கத்தை இன்றும் கைவிடவில்லை.

   "ரஷ்யப் புரட்சி' ஏற்படும்வரை ரஷ்யர்களும், கிரேக்கர்களும், துருக்கியர்களும் பழைய ஜூலியன் காலண்டரையே பயன்படுத்தினார்கள். பின்னர், க்ரிகோரியன் காலண்டரைவிட ஜூலியன் காலண்டர் பன்னிரண்டு நாள்கள் பின்னோக்கி இருப்பதை உணர்ந்த அவர்கள் க்ரிகோரியன் காலண்டரையே பின்பற்றத் தொடங்கினார்கள்.

   சமயப் பற்றுகொண்ட யூதர்களும் முஸ்லீம் மக்களும் அவர்களுக்கென்று தனிக் காலண்டரை உருவாக்கி அதையே பின்பற்றத் தொடங்கினர். "செட்லாண்ட்' தீவைச் சேர்ந்த "ஃபெüலா' இனப் பழங்குடியினர் இன்றும் ஜூலியன் காலண்டரையே பயன்படுத்தி வருகின்றார்கள்.

   உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஜனவரி முதல் தேதியைத்தான் புத்தாண்டாகக் கொண்டாடுவார்கள். ஆனால் ஃபெüலா மக்களுக்கு ஜனவரி 13 அன்றுதான் புத்தாண்டு.  

   இப்படிக் காலண்டரில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பின்னர் வந்த "க்ரிகோரியன் காலண்டரை' உலகக் காலண்டராகக் காலம் அங்கீகரித்தது.   ""முப்பது நாட்களைக் கொண்டதுதான்   செப்டம்பர், ஏப்ரல், ஜூன், நவம்பர்!

 முப்பத்தொரு நாள்களைக்கொண்டது   பிற ஏழு மாதங்கள்!    ஆனால்,   பிப்ரவரியில் இருபத்தெட்டு நாளானால் சாதாரணம்,   பிப்ரவரியில் இருபத்தொன்பது நாள் வந்தால் லீப் வருடம்!''

   என்னும் பொருள்கொண்ட ஆங்கிலப் பாடல் மூலம் ஒவ்வொரு மாதங்களிலும் எத்தனை நாட்கள் வரும் என்பதைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.

   பிரெஞ்ச், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மாதங்களின் நாட்களைச் சுலபமாக அறிந்துகொள்ள தன் இரு கைகளை வைத்துக் கணக்கிட்டனர். தங்களின் இரு கை முஷ்டிகளையும் மடக்கிக்கொள்வார்கள். மேடுகளாய்த் தெரியும் எலும்புகள் 31 நாட்கள் வரும் மாதங்களைக் குறிப்பதாகவும், பள்ளமாக இருக்கும் பகுதிகள் 30 நாட்களைக்கொண்ட (பிப்ரவரி மாதத்தைத் தவிர) மாதங்களைக் குறிப்பதாகவும் கணக்கிட்டார்கள்.

   இந்த முறையில் ஜனவரி முதல் ஜூலை வரையும், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையும், 31 நாட்களும் 30 நாட்களும் மாறி மாறி ஒவ்வொரு மாதமும் வருவதைக் காணலாம். ய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT