அசாமிலும் மணிப்பூரிலும் அறுவடைத் திருவிழா "போகாலி பிகு' என்று அழைக்கப்படுகிறது.
பொங்கல் திருநாளை பஞ்சாபில் "லோகிரி' எனப்படும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
ஹரியாணாவில் பொங்கலன்று கிராமியபாடல்களைபாடி மகிழ்வார்கள்.
மகாராஷ்டிரத்தில் பொங்கல் திருநாளில் ஒருவருக்கொருவர் வண்ண நிற தானியங்களைபரிமாறிக் கொள்வார்கள்.
காஷ்மீரில் "கிச்சடி அமாவாசை' என்ற பெயரில் பருப்பு, நெய், அரிசி கலந்த கிச்சடியை உண்டு பொங்கல் கொண்டாடுகின்றனர்.
பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என அழைக்க அடித்தளமிட்டவர் கா.நமச்சிவாயர் என்ற தமிழறிஞர்.
பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928-ல் பெ.தூரன் அவர்களால் தொடங்கப்பட்டது. அவர் முதலில் பனை ஓலையில் திரு.வி.க., கல்கி ஆகியோருக்கு வாழ்த்து அனுப்பினார்.
திரு.வி.க. தனது நவசக்தி இதழில் பொங்கல் வாழ்த்து அனுப்பிட வேண்டுகோள் விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.