கர்மவீரர் வழி நடப்போம்!
ஆட்சியில் இருந்த போதிலுமே - ஓர் அகந்தை மனதில் அண்டாது, காட்சி அளித்த தலைவர் அவர் - காம ராஜர் என்பதை மறக்காதே! மதிய உணவுத் திட்டத்தால் மாணவர் படிக்கச் செய்தவரை நதிகளில் அணைகள் அமைத்தவரை நன்றி
ஆட்சியில் இருந்த போதிலுமே - ஓர்
அகந்தை மனதில் அண்டாது,
காட்சி அளித்த தலைவர் அவர் - காம
Advertisement
ராஜர் என்பதை மறக்காதே!
மதிய உணவுத் திட்டத்தால்
மாணவர் படிக்கச் செய்தவரை
நதிகளில் அணைகள் அமைத்தவரை
நன்றியுடன் நீ நினைத்திடணும்!
பதவிகள் தேடி வருகையிலும் - மனம்
பதறாது உழைத்த பேராளர்
நிதமும் மக்கள் நலம் கருதி - தன்
குடும்பம் மறந்த தவசீலர்!
எளிமை வாழ்வு, உயர் உள்ளம் - சொல்
என்றும் மாறாப் பெருந்தன்மை
தெளிந்த பார்வை, செயலூக்கத்தால்
தேசம் காத்த தலைவர் அவர்!
நாட்டுக்காக வாழ்ந்தவரை - நாம்
என்றும் மறக்கக் கூடாது!
வீட்டுக்காகப் படித்திடணும் - பின்
நாட்டை நாமும் காத்திடணும்!