முகப்பு
சிறுவர்மணி

வியாபாரம்!

ஒருசமயம் திருச்சி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார் தந்தை பெரியார். அப்போது பிளாட்பார கடையில் காலணா கொடுத்து மிட்டாய் கேட்டார். தந்தை பெரியாரை அடையாளம் கண்டுகொண்ட கடைக்காரர், காலணாவைப் பெற்ற

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:45 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:15 PM

ஒருசமயம் திருச்சி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார் தந்தை பெரியார். அப்போது பிளாட்பார கடையில் காலணா கொடுத்து மிட்டாய் கேட்டார்.

தந்தை பெரியாரை அடையாளம் கண்டுகொண்ட கடைக்காரர், காலணாவைப் பெற்றுக் கொண்டு கைநிறைய மிட்டாய்களை அள்ளிக் கொடுத்தார்.

அவற்றை வாங்கிக் கொண்ட பெரியார், கடைக்காரரைப் பார்த்து, ""எங்க ஊர்ல இவ்வளவு தரமாட்டேங்கறான். நீங்க கை நிறையத் தர்றீங்களே! அப்படின்னா, இன்னொரு காலணாவுக்குத் தாங்க'' என்று மீண்டும் ஒரு காலணாவை எடுத்து நீட்டினார்.

Advertisement

கடைக்காரர் திகைத்தார். உடனே பெரியார், ""ஐயா, வியாபாரத்துல வியாபாரியாத்தான் இருக்கணும்...'' என்று கூறிவிட்டு ஒரு மிட்டாயை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.