முகப்பு
சிறுவர்மணி

தியாகம்

 உருகிக் கரைந்து மெழுகு வர்த்தி  ஒளியைத் தருதல் தியாகமே  கரிய முகிலும் மழையைப் பொழிய  கரைந்து விடுதல் தியாகமே    தேய்ந்து தேய்ந்து வாசம் கமழும்  சந்த னத்தைப் போலவே  காய்ந்து மாய்ந்து உழவு செய்யும்  கட

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

 உருகிக் கரைந்து மெழுகு வர்த்தி

 ஒளியைத் தருதல் தியாகமே

 கரிய முகிலும் மழையைப் பொழிய

Advertisement

 கரைந்து விடுதல் தியாகமே

 தேய்ந்து தேய்ந்து வாசம் கமழும்

 சந்த னத்தைப் போலவே

 காய்ந்து மாய்ந்து உழவு செய்யும்

 கடின உழைப்பும் தியாகமே

 அன்னை மண்ணை மீட்ப தற்கு

 அண்ணல் காந்தி தலைமையில்

 தன்னைத் தந்த திருப்பூர்க் குமரன்

 தங்கம் போன்ற தியாகிதான்

 ஊசி வாடை தாக்கி னாலும்

 ஓய்வில் லாமல் விழிப்புடன்

 தேசம் காக்கும் எல்லை வீரர்

 தினமும் தியாகம் செய்கிறார்

 உன்னைப் பெற்ற அன்னை, தந்தை

 உழைப்பு கூடத் தியாகமே

 இன்னல் என்ன வந்த போதும்

 ஏற்றுப் படிக்க வைக்கிறார்

 விட்டுக் கொடுக்கும் தியாக உணர்வு

 வீட்டில், நாட்டில் அவசியம்

 சிட்டுப் போலத் திரியும் வயதில்

 தியாகம் செய்ய விரும்புநீ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments