குறள் பாட்டு
இரண்டு கண்கள் முகத்திலே இருந்து ஒளியை விழுங்குது
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:56 AM
கல்வி
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
-திருக்குறள்
இரண்டு கண்கள் முகத்திலே
இருந்து ஒளியை விழுங்குது
உலகிலுள்ள பொருட்களை
ஒவ்வொன்றா உணருது
எண்ணும் எழுத்தும் கண்களாய்
மனித வாழ்வில் விளங்குது
வாழ்வை இயக்க இரண்டுமே
தேவையாக உள்ளது.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
Advertisement